Home / Food Receipes / சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்

சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்

நாம எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும் நமக்கே தெரியாத சில குறைகள் இருக்கும். ருசியான சில சமையல் டிப்ஸ் (cooking tips) இப்போ பாக்கலாம்.

பகுதி -1

  • சக்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்.
  • சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டாமல் இருக்க இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித் தனியாகிவிடும்.
  • சப்பாத்தி மாவுடன் சோளமாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
  • புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
  • தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
  • பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
  • வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

இந்த டிப்ஸ follow பண்ணி நீங்களும் சமையல்ல கலக்குங்க. மேலும் டிப்ஸ் தெரிஞ்சிக்க பகுதி – 2 wait பண்ணுங்க.

Check Also

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது பிரியாணி தான். அவர்அவர்களின் விருபத்திற்கு ஏற்றமாறி சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி …

Translate this article to »