Home / Beneficial Hits / அட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்

அட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்

“அட்சய” என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை “அட்சயதிரிதியை” திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.

இந்த வருடம் மே 7-ம் தேதி செவ்வாய் கிழமை (சித்திரை-24) அன்று அட்சய திரிதியை வருகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும்.

அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.

இந்த நன்னாளில் தானம் கொடுக்க சிறந்த நாள். அது அன்னதானம், உடுக்க உடை, குடை, பானகம், நீர் மோர், விசிறி போன்றவற்றை தானமாக பிறருக்கு கொடுக்கலாம். குறிப்பாகத் தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம்.

அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்:

  • அட்சய திருதியை நாளில் குழந்தைகளுக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்தால் அவர்களுக்கு கல்விச் செல்வம் பெருகும். பிறருக்கு இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.
  • அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் நேராது.
  • அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும். குடும்பத்தில் வறுமை நீங்கும்.
  • கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
  • புண்ணிய நதியில் அட்சய திருதியை அன்று நீராடினால் பாவம் போகும்.
  • ஏழை, ஊனமுற்றோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு அட்சய திருதியை நாளில் உணவு தானம் தருவதால் நல்ல பலன் அடைவர்.
  • இந்நாளில் வெள்ளி நகை வாங்கினால் மனக்குழப்பம், நிம்மதியின்மை மற்றும் சரும நோய்கள் தீரும்.
  • தங்கம் வாங்கினால் தீராத கடன் மற்றும் ஏழ்மையும் மிகக் குறுகிய காலத்தில் தீரும்.
  • தயிர் சாதம் ஏழைகளுக்கு தானமாக அளிப்பதால் 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்கும், ஆயுள் பெருகும்.
  • மோர், பானகம், குடிநீர் தானமாக குடிப்பதால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.

இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள். அதே நேரத்தில் அறிஞர்களையும் முன்னோர்களையும் மறந்துவிட வேண்டாம். அட்சய திருதியை நாளில் செல்வங்கள் பெருக நல்வாழ்த்துக்கள்.

Check Also

அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ (Avocado) அல்லது வெண்ணெய் பழம் என்றால் பலருக்கும் தெரியாது. இதையே “பட்டர் ப்ரூட்” (Butter Fruit) என்றால் எல்லாருக்குமே …

Translate this article to »