Home / Beneficial Hits / Healthy Tips / கோடையில் உடம்பு குளுகுளுன்னு இருக்க சில டிப்ஸ்

கோடையில் உடம்பு குளுகுளுன்னு இருக்க சில டிப்ஸ்

கோடைக்  காலம்னாலே எல்லாருக்கும் ஏற்படுகிற ஒரு பயம் வெயிலில் எப்படி டா வெளியில போறதுனுதான், உடம்பு எப்படி குளிற்ச்சியா வைத்துக் கொள்ளுவதுனு தான். சரும பாதுகாப்பு, உடலை  குளிற்ச்சியா வச்சிக்க spa னு வெளியில போய் காசு செலவு பண்ணாம வீட்டுலேயே இயற்கை முறையில் வெயிலிருந்து தற்காத்துக் கொள்ள சில எளிய டிப்ஸ்.

உடம்பு ஜில்லுன்னு வெச்சிக்க டிப்ஸ்:

  • கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நுங்கு, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.
  • மண் பானைகளில் உள்ள குளிர்ச்சியான நீரை அருந்தினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
  • மோரில் சிறிது கொத்தமல்லி, சீரகம் சேர்த்து குடிப்பதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருக்கும்.
  • மத்திய வேளையில் கம்பு, கேழ்வரகு கூழ் அருந்துவது நலம்.
  • உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி, மீன், பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு நிற ஆடைகளை வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
  • தினமும் இருவேளை குளிப்பது உடல் சோர்வை நீக்கும். வெயிலில் சென்று வந்தவுடன் குளிப்பதை தவிர்க்கவும், சிறிது நேரம் கழித்து குளிப்பதால் உடலில் வேர்க்குரு வருவதை தவிர்க்கலாம்.
  • வெளியில் செல்லும் போது முகம் மற்றும் வியர்வையில் இருந்து காத்துக் கொள்ள குடை அல்லது துப்பட்டாவினால்  முகத்தை மூடி செல்ல வேண்டும்.
  • நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ, அல்லது கொஞ்சமாய் வேக வைத்தோ சாப்பிடலாம். அதிகமாய் வேக வைத்தோ, பொறித்து உண்பதிலோ எந்த பயனும் இல்லை.
  • குளிர்சாதன நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும்.கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • எண்ணையில் பொறித்த உணவு வகைகளை தவிர்த்து, கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை பின்பற்றுவது அவசியம்.
  • சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை, எண்ணெயில் பொறித்த உணவு  வகைகளை ஒதுக்கிவிடுங்கள். டீ, காபி குடிப்பதை தவிர்க்கவும்.
  • வெளியில் செல்லும் போது கண்டிப்பாக சன் க்ரீம் லோஷன் முகம் மற்றும் கை, கால்களில் தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த டிப்ஸ் எல்லாம் நாம follow பண்ணோம்னா உடம்புக்கு  எந்த நோயும் இல்லாம குளுகுளுன்னு பாத்துக்கலாம்.

Check Also

பெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க

கல்யாணம் ஆன பெண்கள் மெட்டி (silver toe ring) அணிந்து கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் இந்த …

Translate this article to »