Home / Caring Hits / Baby Care / குழந்தைகளை பராமரிக்க சில வழிமுறைகள்

குழந்தைகளை பராமரிக்க சில வழிமுறைகள்

some methods to maintain children
some methods to maintain children

இன்றைய சூழலில் குழந்தைகளை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை சொன்னால், கண்டித்தால் பிடிக்காது.

பெரியவர்களுக்கு வெளியில் ஆயிரம் பிரச்சனைகள், கோபங்கள் இருக்கும். அதற்காக குழந்தைகள் முன்பு கோபத்தைக் காட்டக்கூடாது.

குழந்தைகளுக்காக சிறிது நேரத்தை செலவிட்டு அவர்களின் தேவைகளை, எண்ணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பதும் தவறாகும்.

அவர்களின் விருப்பத்தை கேட்காமல் பெற்றோரே முடிவு செய்வது தவறு.

குழந்தைகள் கேட்காமல் நாமே அவர்களுக்கு சில பொருட்களை வாங்கக்கூடாது. அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை தெரிந்துக்கொண்ட பிறகே பொருட்களை வாங்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களை கண்டித்து சாப்பிட வைக்கக்கூடாது. அவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்களே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடவைக்க வேண்டும்.

நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு compare பண்ணக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகளுக்கு மன வருத்தம் உண்டாகும்.

நாம் செய்யும் சின்ன சின்ன வேலைகளை குழந்தைகளுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகள் செய்யும் பழக்கம் வரும்.

தினமும் இருமுறை பல் துலக்குவது, தும்மல் வரும்போது kerchief-ஐ வைத்து மூக்கை மூடி தும்முவது போன்ற நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாம்.

குழந்தைகள் செய்யும் பல நல்ல விஷயங்களை அவர்களிடம் சொல்லி பாராட்டுங்கள். இதனால் குழந்தைகளுக்கு சந்தோஷம் கிடைப்பது மட்டுமில்லாமல் நல்ல வேலைகளை செய்யவும் தோன்றும்.

Leave a Reply

Translate this article to »