Home / Beauty Hits / கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

கற்றாழையில் ஆன்டி-மைக்ரோபியல் (Anti-microbial) மற்றும் ஆன்டி- பாக்டீரியல் (Anti-bacterial) அதிகம் உள்ளது. கற்றாழை (Aloe Vera) குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் சருமம் (Skin) மற்றும் கூந்தலுக்கு (Hair) மிகவும் ஏற்றது.

கற்றாழையின் மருத்துவ நன்மைகள் (Aloevera Medical Benefits)

வெயிலில் சருமத்தை காக்க: சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த சன் ஸ்க்ரீன் லோஷன் (Sun Screen Lotion) ஆக கற்றாழை ஜெல் (Aloe Vera Gel) பயன்படுகிறது. மேலும், முகம் கருமை நிறத்தை போக்கி நல்ல பொலிவையும் தருகிறது.

முகப்பரு (Pimples): முகப்பரு உள்ள இடங்களில் கற்றாழை ஜெல்லை தடவினால் இதில் உள்ள ஆன்டி- மைக்ரோபியல் (Anti-microbial) மற்றும் ஆன்டி- பாக்டீரியல் (Anti-bacterial) பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளும் முகப்பரு மறைந்து முகம் அழகு பெறும்.

இளமை சருமம் (Youthful Skin): சிலர் இளமையிலேயே முதுமை தோற்றம் அடைகின்றனர். அவர்கள் கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் முதுமை தோற்றம் மறைந்து இளமை தோற்றத்தை பெறுவர்.

கண் கருவளையம் (Dark Circles): கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்க கற்றாழை ஜெல்லை கண்களுக்கு கீழ் பகுதியில் தடவி மசாஜ் செய்தால் கண் குளிர்ச்சி அடைந்து கருவளையத்தை போக்கும்.

உதடு வறட்சி (Lip Drought): அடிக்கடி உதடு வறட்சி ஏற்படுவதை தடுக்க காற்றாழை ஜெல்லுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து உதட்டில் தடவினால் மென்மையான உதடு கிடைக்கும்.

உடல் எடை குறைய (Body Wight Loss): தினமும் கற்றாழை ஜெல்லை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை குறைக்கும்.

சர்க்கரை நோய் (Diabetes): சர்க்கரை நோயாளிகள் கற்றாழை ஜெல்லை குடித்து வந்தால் இதில் உள்ள ஹார்போஹைட்ரேட் (Harpohaitret) மெட்டபாலிசம் (Metabolism) சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட கற்றாழையை (Aloe Vera) தினமும் பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது.

Check Also

அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ (Avocado) அல்லது வெண்ணெய் பழம் என்றால் பலருக்கும் தெரியாது. இதையே “பட்டர் ப்ரூட்” (Butter Fruit) என்றால் எல்லாருக்குமே …

Translate this article to »