Home / Beneficial Hits / வெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?

வெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?

வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பொருளில் முக்கிய பங்கு வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா (Allium Cepa) வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

வெங்காயத்தில் புரதச்சத்து (Protein), காப்பர் (Copper), பாஸ்பரஸ் (Phosphorus), மக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Potassium), குரோமியம் (Chromium), மங்கனீஸ் (Manganese), நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள் (Vitamins) மற்றும் தாது உப்புக்கள் (Mineral salts)ஆகிய சத்துக்கள் உள்ளது.

50 கிராம் வெங்காயத்தில் 20 யூனிட் இன்சுலின் (Insulin) உள்ளது. மேலும் வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினி (Anti Synthesis) யாக உள்ளது.

மருத்துவத்தில் வெங்காயத்தின் பங்கு:

உணவு (food): தயிர் அல்லது மோருடன் வெங்காயத்தை சேர்த்து காலையில் குடிப்பதால் இதில் உள்ள அல்லிசின் வேதிப்பொருள் உடலுக்கு நல்லது.

சர்க்கரை நோய் (diabetes): வெங்காயத்தில் உள்ள இன்சுலின் (Insulin) இரத்தத்தில் உள்ள  சர்க்கரையின் அளவைக் குறைகிறது. உடல் பருமனானவர்கள் கூட சாப்பிடலாம்.

பற்கள் (teeth): வெங்காயம் பற்களில் ஏற்படும் ஆன்டி ஃபங்கல், ஆன்டி பயாடிக்கிருமிகளை போக்க கூடிய சிறந்த மருந்து. வெங்காய சாற்றை பல் ஈறுகளில் தடவி வர பல்வலி, ஈறுவலி குணமாகும்.

சிறுநீர் (kidney): வெங்காயத்தில் உள்ள யூரிக் அமிலம் (Uric acid)சிறுநீர் பையில் ஏற்படும் கற்களை கரைக்கும் மேலும் சிறுநீர் பாதையில் ஏற்படுகின்ற அழற்சியை போக்கக் கூடிய தன்மையும் உண்டு.

இதய நோய் (heart disease): உடலில் உள்ள கொழுப்பு (Cholesterol)க்களைக் குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் சரிசெய்து இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

மாதவிலக்கு (premenstrual syndrome): வெங்காயத்தில் உள்ள எமனகோக் சரியான நேரத்தில் மாதவிலக்கை தூண்டுகிறது. வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட வெள்ளைபடுத்தல் பிரச்சனை சரியாகும்.

விஷக்கடி: தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கி வைத்து கட்டினால் விஷம் குறையும். படை, தேமல் உள்ள இடங்களிலும் தடவலாம்.

நுரையீரல் (lung): வெங்காய சாற்றை ஒரு நாளைக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை குடித்து வர புகைபிடிப்பவர்களின் நுரையீரலை சுத்தம் செய்யும்.

முகப் பருக்கள் (pimples): முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் வெங்காயச் சாறு தடவினால் பருக்கள் மறைந்து விடும்.

முடி உதிர்வு (hair fall): தலை வழுக்கை உள்ள இடங்களில் வெங்காய சாற்றை தடவி வர முடி உதிர்வை தடுத்து புது முடியை வளரச் செய்யும்.

கட்டிகள் (tumors): வெயில் காலத்தில் சிலருக்கு கட்டிகள் வரும் அப்பொழுது, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள வெங்காயத்தை சரியாக பயன்படுத்தினால் நோய்கள் வராமல் நம்மை காத்துக்கொள்ளலாம்.

Check Also

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் …

Translate this article to »