Home / Food Receipes / அஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்

அஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த சுவையான சமையலுக்கான முக்கிய காரணம் அஞ்சறைப் பெட்டி. இது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி. இந்த அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

சீரகம்: சீர்+அகம்=சீரகம்

  • சீரகம் உடம்பை குளிர்வித்து உடல் செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து கொடுக்க பெப்டிக் அல்சர் குணமடையும்.
  • சீரகத்தை நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து உண்டு வந்தால் தேகம் வன்மை பெறும்.

சோம்பு அல்லது பெருஞ்சீரகம்:

  • பெருஞ்சீரகத்தில் வைட்டமின் பி-6, காப்பர், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது
  • பெருஞ்சீரகம் பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களுக்கு சிறந்த தீர்வுவை தருகிறது. மேலும் ஈரல் நோய், செரியாமை போன்ற நோய்களையும் நீக்குகிறது.

மிளகு:

  • மிளகு வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் போன்ற சத்துக்களைக் கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை முறிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
  • அறுகம்புல் + மிளகு  சேர்ந்த குடிநீர், தோல் ஒவ்வாமையைப் போக்கும். மேலும் நல்ல பசியை தூண்டக்கூடியது.

மஞ்சள்:

  • மஞ்சளில் ஆல்கலாய்டு என்ற Curcumin உள்ளது. இது ஒரு சிறந்த வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பொருளாகும். இதில் வைட்டமின் பி அதிகம் உள்ளது.
  • மஞ்சளில் உள்ள உட்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கிடவும், நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

வெந்தயம்:

  • வெந்தயம் நம் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவையும், ஹீமோகுளோபின் அளவையும் தக்கவைத்து, ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.
  • சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி, பித்தம் தணிப்பதில் சிறந்தது.
  • உடற்சூட்டைக் குறைத்து நல்ல தூக்கத்தை உண்டாக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பலனைத் தருகிறது.
  • வெந்தயத்தை அரைத்து தலையில் வைத்து குளித்து வர முடி உதிர்வைத் தடுக்கலாம். கூந்தலும் நன்கு அடர்த்தியாக வளரும்.

கடுகு:

  • கடுகு ரத்த ஓட்டத்தை அதிகரித்து குடல் வாலைப் பாதுகாத்து குடல்வால் அழற்சி நோய்-லிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

பெருங்காயம்:

  • பெருங்காயம் மூட்டுகளின் சந்துகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதில் சிறப்பானது.
  • பெருங்காயத்தை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றுபோட குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் குணமாகும்.
  • பெருங்காயத்துடன் உளுந்து சேர்த்து பொடித்து தீயிலிட்டு புகைத்து அதன் புகையை நாம் சுவாசித்தால் சுவாச நோய்கள் நீங்கும்.

இலவங்கப்பட்டை:

  • இலவங்கத்தில் Cinnamic acid அதிக அளவில் உள்ளது. இதிலுள்ள Tannin உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL எனப்படும் கொழுப்பை நீக்குகிறது. இதனால் இதயநோய்கள் வராமல் தடுக்க இயலும்.

அஞ்சறைப் பெட்டியுள்ள பொருட்களை நாம் தினமும் சரியான விகிதத்தில் பயன்படுத்து வந்தோமானால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

Check Also

பெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க

கல்யாணம் ஆன பெண்கள் மெட்டி (silver toe ring) அணிந்து கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் இந்த …

Translate this article to »