Home / Beneficial Hits / வேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்

வேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்

அதிக பயனுள்ள மரங்களில் முக்கிய பங்கு வேப்பமரத்தையே சாரும். வேப்ப மரத்தின் பூ, இலை, பழம், பட்டை, வேப்பங்கொட்டை எல்லாமே மருத்துவ பயன்களை உடையது.

வெயில் காலத்துக்கு வேப்பமரம் நமக்கு என்னெல்லாம் பயன் தருதுன்னு பாக்கலாம்.

வேப்பம் பூ:

  • வேப்பம் பூவுடன் நில வேம்பு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, நன்கு பசியை தூண்டும்.
  • வேப்பம் பூவுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து குழைந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவு கொடுத்தால், வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் அழித்து உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.
  • வேப்பம் பூவை காய வைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ஏப்பம், மற்றும் பித்தம் நிற்கும்.
  • வேப்பம் பூவை ரசம் அல்லது துவையல் செய்து சாப்பிட்டால்  வாந்தி, குமட்டல் மற்றும் மயக்கம் நிற்கும்.
  • வேப்பம் பூவுக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. நீரை சூடு செய்து அதில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலை வலி, காது வலி குணமாகும்.

வேப்பம் பழம்:

  • வேப்பம் பழத்தை அரைத்து சாறு எடுத்து தோல் புண், சொறி, சிரங்கு இடங்களில் பூசி வர விரைவில் குணமாகும்.
  • வேப்பம் பழத்தை சர்பத் ஆக குடிக்க உடலில் உள்ள கிருமிகளை அழித்து தோல் நோய்கள், சொறி, சிரங்கை குணபடுத்தும் ஆற்றலை உடையது.

வேப்பங்கொட்டை:

  • வேப்பங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து அரைத்து, புண்கள் மீது பூசிவர குணமாகும். மேலும் குஷ்ட நோய்களையும் குணப்படுத்தும்.
  • 3 கிராம் வேப்ப விதையுடன் சிறிது வெல்லம் சேர்த்து தினமும் காலை, மாலை 40 நாட்கள் சாப்பிட்டு வர மூல நோய் தீரும்.
  • உடலில் ஏற்பட்டுள்ள புண்களில் தொற்று நோய் தாக்காமல் இருக்க வேப்பங்கொட்டையை அரைத்து பூசுவது நலம்.
  • வேப்பங் கொட்டையிலிருந்து தயாரிக்கும் வேப்ப எண்ணெய் தலையில் உள்ள பேன்களை அழிக்கும்.

வேப்ப இலை:

  • வேப்ப இலை ஒரு சிறந்த கிருமி நாசினி. வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வேம்பு தேநீர் குடித்து வந்தால், அவற்றை சரிசெய்து அஜீரணக் கோளாறுகளையும் சரிசெய்யும்.
  • நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை உண்டு வந்தால் இரத்தத்தில் கரைந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
  • அம்மை நோய் உள்ளவர்கள் வேப்ப இலைகளை சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் காய்ந்த பின் குளிர்ந்த நீரில் குளிக்க சீக்கிரம் குணமடையும்.
  • சுடு நீரில் சிறிது வேப்ப இலைகளை போட்டு குளிக்க தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • குழைந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ள சிறிது வேம்பு கொழுந்தை மை போல் அரைத்து தண்ணீரில் கலந்து ஒரு அவுன்ஸ் கொடுக்கலாம்.

வேப்ப மர பட்டை:

  • வேப்ப பட்டையை நன்றாக உலர்த்தி இடித்து சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி குடித்து வந்தால் சீதபேதி குணமாகும்.
  • தேங்காய் எண்ணெயுடன் வேப்ப பட்டை பொடியை சேர்த்து காய்ச்சி தைலமாக உபயோகப்படுத்தலாம். தோல் நோய், சொறி, சிரங்குகளின் மேல் தடவி வந்தால் விரைவில் குணமடையும்.

வெயில் காலத்திற்கு வேப்ப மர நிழலில் ஓய்வெடுப்பது உடலுக்கு நலம். மரங்களை வெட்டாமல் அதில் உள்ள நன்மைகளை பெற வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

Check Also

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் …

Translate this article to »