Home / Seasonal Hits / Rainy Season / மழைக்கால நோய்களை தடுக்க உதவும் உணவுகளில் சில

மழைக்கால நோய்களை தடுக்க உதவும் உணவுகளில் சில

Foods that Help to Prevent Rainy Season Diseasesமழைக்காலங்களில் காலையில் கண் விழிப்பதில் தொடங்கி உறங்கும் வரையிலான அன்றாட நடவடிக்கைகளில் குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுமுறையைக் கொஞ்சம் மாற்றினால் நல்லது.

குளிர் காலத்தில் fan கீழே தூங்குவது, A.C-யை ON பண்ணி தூங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றைச் செய்தால் மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி சளித்தொல்லை ஏற்படும்.

இது sinus, asthma பிரச்சனை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு allergies ஏற்பட்டு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அப்படிப்பட்டச் சூழலில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். காபி, டீ குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். தேயிலையுடன் இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்கவைத்து இனிப்பு சேர்த்து குடிக்கலாம். வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.

சளிப் பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை குடிப்பதும் நன்மை தரும்.

தலைக்குக் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலர்த்தி சாம்பிராணி புகை காட்டுவது அல்லது வெந்நீரில் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

இரவு உறங்கும்போது தலையணை உறையில் நொச்சி இலைகளை (vitex leaves) வைத்து தூங்குவதும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து விடுதலை தரும்.

Foods that Help to Prevent Rainy Season Diseases
Foods that Help to Prevent Rainy Season Diseases

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை சாப்பிடும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது.

Side dish-ஆக தூதுவளைச் சட்னி, இஞ்சி சட்னி செய்து சாப்பிடலாம். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்து சேர்த்து தோசை சுட்டு சாப்பிட்டால் சளித்தொல்லை வராது.

மழைக்காலங்களில் மிக எளிதாக வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அதிக அளவில் நீர்ச்சத்து வெளியேறும் என்பதால் உடல் சோர்வு, நடக்க முடியாதா நிலை ஏற்படும்.

கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் விலகும்.

முற்றிய வெண்டைக்காயில் soup செய்து குடித்தாலும், தக்காளியில் soup செய்து குடித்தாலும் இருமல், ஜலதோஷம் விலகும்.

மணத்தக்காளிக்கீரையை soup செய்து குடித்தால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மேலும், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

இரவு உணவுகளில் ஆவியில் வேகவைத்த உணவுகளாகவோ, அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளாகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நாம் சாப்பிடும் உணவுகளில் மிளகுத்தூளை சேர்த்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.

இரவு தூங்க செல்வதற்கு முன் பூண்டுப்பால் குடிக்கலாம். இதை சாப்பிட்டால் மூக்கடைப்பு, நெஞ்சுச்சளியால் ஏற்படும் மூச்சுத்திணறல், இருமல், தலைபாரம் போன்றவை நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.

வீட்டின் உள்ளே கற்பூரம் கொளுத்துவது, படுக்கையைச் சுற்றி பூண்டுப் பற்களை நசுக்கிவைப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்றவை பூச்சிகளின் தொந்தரவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

இனிப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக்கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

இறைச்சி சாப்பிட்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Translate this article to »