Home / Caring Hits / Baby Care / குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள்

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள்

Feeding Methods for Children
Feeding Methods for Children

பெற்றோர்களுக்கு தன் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்பதே ஆசை. குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய வேலை.

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவை சாப்பிட வைப்பதற்குள் பாதி நேரம்  போய்விடுகிறது.ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல், அடம்பிடிப்பதற்கு பெற்றோர்களும் காரணமாக இருக்கிறார்கள்.

குழந்தைகள் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணங்கள்:

சாப்பிடும் உணவு அளவானதாக இல்லாமல், அதிகமான உணவுகள் இருப்பது.

அவர்களுக்கு பிடிக்காத உணவை கொடுத்து சாப்பிட சொல்லுவதும்  தவறாகும்.

சோடா குடிக்கக்கூடாது, snacks சாப்பிடக்கூடாது என்ற conditions-ஐ குழந்தைகளிடம் போடக்கூடாது.

காய்ச்சல் இருக்கும் போது குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.

Food Allergy ஏற்பட்டால் கூட சாப்பிட மாட்டார்கள்.

குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது?

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை கொடுத்து சாப்பிட வைக்கலாம்.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான, வீட்டில் செய்த snacks கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு Healthy Fruits – யை சாப்பிடக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்த cartoons பார்க்க வைத்து சத்தான காய்கறிகளையும், தினமும் ஒரு egg -ஐ  சாப்பிட வைக்கலாம்.

குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான உணவைக் கொடுப்பதால் உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை பிரச்சனைகள் உண்டாகக் கூடும். எனவே, சத்தான உணவுகளை மட்டும் கொடுத்து குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உணவுகளை சரியான நேரத்தில் கொடுக்காமல் நேரம் கடந்து கொடுத்தால் செரிமான பிரச்சனை, மலச்சிகள் வரக்கூடும். எனவே, சரியான நேரத்தில் உணவைக் கொடுப்பது நல்லது.

ஜங்க் ஃபுட் உணவு வகைகளை அதிகம் தருவதற்கு பதிலாக, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க ஒரு நல்ல வழி.

குழந்தைகளின் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள் எளிதில் செரிமானமாகும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Translate this article to »