Home / Caring Hits / General Care / வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க!

வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க!

வெயிலில் சென்று வந்தவுடன் ஜில்லுன்னு எதாவது குடித்தால் நல்லா இருக்குமேன்னு தோணும். அப்போ சிறந்த குளிர்பானமாக இருப்பது மோர் (buttermilk) தான். அப்படி என்ன இருக்கு மோர்லனு பாக்கலாம்.

மோர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்(benefits:

  • மோரில் (buttermilk) விட்டமின் பி காம்ப்ளக்ஸ் (Vitamin B Complex), புரோட்டீன் (Protein) மற்றும் பொட்டாசியம் (kalium) அதிகம் உள்ளது.
  • வைட்டமின் பி, ரிபோப்ளே (Ripople)வில் தான், உணவை எனர்ஜியாக மாற்றி செரிமானத்தை அதிகரித்து, ஹார்மோனை சீராக சுரக்கவும் செய்கிறது.
  • மோரில் எலக்ட்ரோலைட்ஸ் (Electrolytes) மற்றும் தண்ணீர் (Water) அதிகமாக இருப்பதால், கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
  • மோர், விட்டமின் குறைபாடு (Vitamin deficiency), வயிற்றை குளிர்ச்சி அடைய மற்றும் அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலுக்கு உடனடி நிவாரணம் பெற, தினமும் ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும்.
  • காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோரில் இஞ்சி, மிளகு, சீரகம் மற்றும் மல்லி இலை போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும்.
  • மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோ ஆக்டிவ் புரோட்டீன் (Bioactive protein), ஆன்டி-வைரஸ் (Anti-virus), ஆன்டி-பாக்டீரியல் (Anti-bacterial) மற்றும் ஆன்டி-கேன்சர் (Anti-cancer) பொருள்கள் நிறைந்துள்ளது.
  • மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி (Acititti) பிரச்சனைக்கு நிவாரணம் மேலும் நன்கு பசியுணர்ச்சியை தூண்டும்.
  • முக பொலிவு: சரும நோய் மற்றும் சரும‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திக்கு மோரை ஒரு காட்டன் துணியைக் கொண்டு தினமும் 2 முறை துடைத்து வர சரியாகும்.
  • மோர் குடிப்பதால் உடல் எடை, தேவையற்ற கொழுப்பை குறைப்பதோடு, தோல் நோய்கள் எதுவும் வராமலும் தடுக்கும்.
  • வயிற்றுப் போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் உடல் சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிற்கு மோர் குடிப்பது நல்லது.
  • மோர் குடிப்பதால் வாய்ப்புண், வயிற்றுபுண் மற்றும் மூல நோய்க்கும் நல்ல மருந்தாக இருக்கிறது.

முக்கிய குறிப்பு:

  • கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டி(Fridge)யில் வைத்தால் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
  • தயிரில் தண்ணீர் கலந்து மோர் (buttermilk) என சாப்பிடக் கூடாது.
  • சளி, இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் இருப்பவர்கள் மோரும், மோர்சாதமும் சாப்பிடக் கூடாது.

Check Also

அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ (Avocado) அல்லது வெண்ணெய் பழம் என்றால் பலருக்கும் தெரியாது. இதையே “பட்டர் ப்ரூட்” (Butter Fruit) என்றால் எல்லாருக்குமே …

Translate this article to »