Home / Caring Hits / General Care / நோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்

நோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்

சுப காரியங்களில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் (turmeric) ஒரு மிக சிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சளில் பல வகை:

  • மஞ்சளில் கறி மஞ்சள்
  • கஸ்தூரி மஞ்சள்
  • மர மஞ்சள்
  • குரங்கு மஞ்சள்
  • பலா மஞ்சள்
  • நாக மஞ்சள்
  • காஞ்சிரா மஞ்சள்
  • குச்சி மஞ்சள்
  • குண்டு மஞ்சள் என பல வகைகள் உள்ளன.

மஞ்சளுடைய மகிமைகள் என்னன்னு இருக்குனு பாக்கலாம்.

மஞ்சளின் நன்மைகள் (Turmeric Benefits):

  • மஞ்சள் (turmeric) சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது.
  • மஞ்சளானது வலி நிவாரணியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையதாகவும் இருக்கிறது.
  • மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்து பூசி வந்தால் அம்மை கொப்புளங்கள் ஆறும். மேலும் பாத வெடிப்புகளுக்கு மஞ்சள் பற்றைத்  தடவி வந்தால் குணமாகும்.
  • மஞ்சளுடன் ஆடா தொடை இலையை அரைத்து பசும் பால் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு மற்றும் நமைச்சல் குணமாகும். தோல் நோய் மற்றும் வயிறு சமந்தமான நோய்களை தீர்க்கும்.
  • மஞ்சளுடன் சிறிது உப்பு நீரில் கலந்து காய்கறிகளை கழுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து நோய்கள் வராமலும், இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
  • மஞ்சள் (turmeric) மிகச்சிறந்த கிருமி நாசினியில் உள்ள ஜிஞ்சிபெரின், ஒலியரோசின் எனும் வேதிய பொருட்கள் பித்தம், கபம், தலவலி, தோல் நேய்கள், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
  • மஞ்சளில் புரதச்சத்து, கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்ற மருந்துகள்  தயாரிக்கப்படுகிறது. சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகவும் பயன்படுகிறது.
  • பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து அதில் சிறிது மஞ்சள் (turmeric) சேர்த்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.

இவ்வளவு நன்மைகள் (benefits) கொண்ட மஞ்சளை நாம் பயன்படுத்தினோம் என்றால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

Check Also

அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ (Avocado) அல்லது வெண்ணெய் பழம் என்றால் பலருக்கும் தெரியாது. இதையே “பட்டர் ப்ரூட்” (Butter Fruit) என்றால் எல்லாருக்குமே …

Translate this article to »