Home / Beauty Hits / அழகை கூட்டும் முல்தானி மெட்டி

அழகை கூட்டும் முல்தானி மெட்டி

எல்லாருக்குமே அழகா இருக்கணும் ஆசை இருக்கும். அதற்கு நிறைய பணத்த பார்லருக்கு செலவு பண்றதுக்கு பதிலாக இயற்கையாக கிடைக்குற முல்தானி மெட்டி பவுடர் (Multani Mitti Powder) வைத்து முகத்தை எந்த அளவுக்கு அழகா வைத்துக் கொள்ளலாம்னு பார்க்கலாம்.

இயற்கையாக முக அழகை அதிகரிக்க சிறந்த அழகு பொருள் முல்தானி மெட்டி ஆகும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு (Magnesium chloride) அதிகம்  உள்ளதால் முக அழகை அதிகரிக்கும்.

முல்தானி மெட்டியின் அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க முல்தானி மெட்டி ஆன்டி-பாக்டீரிய (Anti-bacterial) பண்பை பெற்றுள்ளது.

  • முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் (Rose Water) அல்லது கற்றாழை ஜெல் (Aloe vera Gel) சேர்த்து, பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
  • எலுமிச்சை சாற்றை (Lemon Juice) சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி அழுக்கை நீக்கி பிறகு, முல்தானி மெட்டியுடன் பால் (Milk) சேர்த்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து வசீகரமான தோற்றத்தை பெறுவர்.
  • இளநீர் (Tender Coconut) அல்லது முட்டையின் (Egg White) வெள்ளைக்கருவுடன் முல்தானி மெட்டியை சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் எண்ணெய் பசை நீங்கி மிருதுவாக இருக்கும்.
  • பன்னீருடன் (Paneer) சிறிது தயிர் (Curd) மற்றும் முல்தானி மெட்டியை சேர்த்து முகத்திற்கு தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகத்திற்கு பொலிவையும் அழகையும் அதிகரித்து தோல் சுருங்குவதை தடுக்கும்.
  • கற்றாழை(Aloe vera)யுடன் முல்தானி மெட்டி சிறிது எலுமிச்சை சாறு (Lemon Juice) சேர்த்து முகத்திற்கு தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் பால் போன்ற நிறமுடைய முகத்தை கண்கூடாக காணலாம்.
  • முல்தானி மெட்டியுடன் தக்காளி சாறு (Tomato Juice) அல்லது ஆரஞ்சு பழச்சாறு (Orange Juice) சிறிது சேர்த்தும் முகத்திற்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட முகம் பளிச்சென்று வெள்ளையாக இருப்பதை பார்க்கலாம்.

இவ்வளவு அழகை கூட்டும் முல்தானி மெட்டி(Multani Mitti)யை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நீங்கள் தான் அடுத்த உலக அழகி!

Check Also

வெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?

வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பொருளில் முக்கிய பங்கு வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா (Allium Cepa) …

Translate this article to »