Home / Beneficial Hits / அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ (Avocado) அல்லது வெண்ணெய் பழம் என்றால் பலருக்கும் தெரியாது. இதையே “பட்டர் ப்ரூட்” (Butter Fruit) என்றால் எல்லாருக்குமே தெரியும். இந்த பட்டர் ப்ரூட் (Butter Fruit) சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Benefits) பற்றி பார்ப்போம்.

அவகேடோவில் பழத்தில் (Avocado Fruit) இவ்வளவு நன்மைகளா?

அவகேடோவில் மக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Potassium), வைட்டமின் சி (Vitamin C), வைட்டமின் கே1 (Vitamin K1), வைட்டமின் பி6 (VitaminB6), கார்போஹைட்ரேட் (Carbohydrate), மற்றும் நல்ல கொழுப்புகள் (Good Cholesterol) அதிகளவு உள்ளது.

அவகேடோ பழமாக (Avocado Fruit) சாப்பிடுவதை விட பழச்சாறு (Juice) ஆக குடிப்பதே அதிக நன்மையை (Benefits) தரும்.

avocado fruit benefits

இரத்த அழுத்தம் (Blood Pressure):

அவகேடோ (Avocado Fruit) பழத்தில் உள்ள பொட்டாசியம் (Potassium) இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும். வாழைபழத்தில் உள்ளதை விட இதில் பொட்டாசியம் (Potassium) சத்து அதிகம்.

கொலஸ்ட்ரால் (Cholesterol):

அவகேடோ (Avocado Fruit) பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கொலஸ்ட்ரால் (Cholesterol) பிரச்சனையை கட்டுக்குள் வைக்கும்.

புற்று நோய் (Cancer):

அவகேடோ (Avocado Fruit) பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்துகிறது.

அவகேடோவில் உள்ள ப்ரீ-ராடிக்கல் நோய்களை எதிர்த்துப் போராடி, ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் (Breast Cancer) தடுக்கிறது.

மூட்டு வீக்கம் (Arthritis):

உணவில் அதிகம் அவகேடோ (Avocado Fruit)  பழத்தை சேர்த்துக் கொள்வதால் எலும்பு வலிக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

உடல் எடை (Body Weight):

அவகேடோவில் நார்சத்து (Fibre nutrition) அதிகம் உள்ளதால் இது உடல் எடையைக் குறைக்கும். மேலும் உயர் இரத்த சர்க்கரையை குறைத்து செரிமான பிரச்சனையையும் சரிசெய்கிறது.

சிறுநீரகம் (Kidney):

அவகேடோவில் ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் கற்கள் (Kidney stones) மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினை (bladder issue)களை தடுக்கும்.

கண் (Eye):

அவகேடோவில் லுடீன் (Lutein) மற்றும் ஸீக்ஸாக்தைன் (Zeaxanthin) பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் (Carotenoids) கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும்.

கண் பார்வை திறன், புரை வளர்தல் பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.

அழகு (Beauty):

அவகேடோ (Avocado Fruit) பழத்தை சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல்,  சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.

இவ்வளவு நன்மையை தரக்கூடிய அவகேடோ (Avocado Fruit) பழத்தை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

Check Also

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் …

Translate this article to »